பிடிச்ச பாத்திரம்!
ADDED :2781 days ago
கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்போது நைவேத்யமாக தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டில் பூஜை நடத்தும் போது அவரவர் விருப்பம் போல பழவகைகள், பொங்கல் என நைவேத்யம் படைத்து வழிபடலாம். இவற்றை படைக்கும் பாத்திரம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். “ஹைரண்யம் ராஜதம் காம்ஸ்யம் தாம்ரம் ம்ருந்மயமேவ சபாலாசம் பத்மபத்ரம் வா பாத்ரம் விஷ்ணோ ரதிப்ரியம்” என்கிறது பரசுராம கல்ப சூத்ரம்.தங்கம், வெள்ளி,வெண்கலம், தாமிரம், மண் இவற்றால் ஆன பாத்திரத்திலோ அல்லது தாமரை இலையிலோ நைவேத்யம் படைக்க வேண்டும். இவற்றில் வைத்தால் விஷ்ணு அந்த பிரசாதங்களை பிரியத்தோடு ஏற்றுக் கொள்வதாக இந்த ஸ்லோகம் கூறுகிறது.