திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை விழா
ADDED :2706 days ago
பழநி: கார்த்திகை முன்னிட்டு பழநி மலை முருகன்கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.
உற்சவருக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன.விளக்குப்பூஜை சொற்பொழிவு, மலைக்கோயிலில் தேரோட்டம்நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்தனர்.