எமதர்மர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
ADDED :3038 days ago
மேட்டுப்பாளையம் : சிறுமுகை, சென்னம்பாளையத்தில், எமதர்மருக்கு தனியாக கோவில் கட்டி வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்து வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை நாளிலும், பெரிய விழா போன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இம்மாத அமாவாசை நாளில், எமதர்மருக்கு பால், நெய், பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகியவற்றால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.