உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செபத்தையாபுரம் ஆலயத்தில் குடும்ப பண்டிகை விழா!

செபத்தையாபுரம் ஆலயத்தில் குடும்ப பண்டிகை விழா!

சாயர்புரம் : சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் குடும்ப பண்டிகை விழா மற்றும் திருமண்டல உபவாச ஜெபம் ஆகியவை நடந்தன. குடும்ப பண்டிகை விழா அன்று ஆலயத்தில் உடன்படிக்கை ஆராதனையும், தீபமேற்றும் ஆராதனையும் நடந்தது. தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் குடும்ப பண்டிகை விழா செய்தி அளித்து ஆசி வழங்கினார். திருச்சபை மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயத்தை சுற்றி வந்தனர். முன்னதாக விளையாட்டு போட்டிகள், பாட்டுப்போட்டி, திருமறை தேர்வு ஆகியவை நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் திருச்சபை பொறுப்பாளர்கள் ரோச், வக்கீல் ராஜரத்தினம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங்ராஜ், சேகரகுரு லிவிங்ஸ்டன், திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மறுநாள் ஆலயத்தில் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் தலைமையில் திருமண்டல உபவாச ஜெபம் நடந்தது. இதில் திருமண்டலம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேகர குரு லிவிங்ஸ்டன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங்ராஜ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !