உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூர் கோயிலில் வைகாசி உற்ஸவம் நாளை துவங்குகிறது

திருவாதவூர் கோயிலில் வைகாசி உற்ஸவம் நாளை துவங்குகிறது

மேலுார், மேலுார் தாலுகா திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் நாளை ( மே 18) துவங்கி மே 28 வரை நடக்கிறது. மே 19 கொடியேற்றம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறைநாதர், வேதநாயகி அம்மன் மே 23 மேலுார் எழுந்தருள்வர். இது மாங்கொட்டை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மே 26 திருக்கல்யாணம், 27தேரோட்டம் நடக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் மேலுாரில் ஒரு சிவனடியார் இருந்துள்ளார். தினமும் எட்டு கி.மீ., துாரத்தில் உள்ள திருவாதவூருக்கு நடந்து சென்று திருமறைநாதரை தரிசிப்பார். அவரது வயதான காலத்தில் சிவபெருமான் கனவில் தோன்றி நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் எனகூறியுள்ளார். அதன்படி சிவன் மேலுார் எழுந்தருள்வதாக புராணம் கூறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார்கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், பேஷ்கார் திரவியம் குமார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !