ரமலான் நோன்பு இன்று துவக்கம்
ADDED :2798 days ago
சென்னை: இஸ்லாமியர்கள் புனித கடமையான, ரமலான் நோன்பு, இன்று துவங்குவதாக, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று துவங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசின் தலைமை காஜி, முகமது சலாவுதீன் அய்யூபி, நேற்று அறிவித்தார். ரமலான் மாத பிறை, பல பகுதிகளில் தென்பட்டதால், நோன்பு துவங்குவதாக, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.