சக்தி மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
ADDED :3002 days ago
நரசிங்கபுரம்: பால்குட ஊர்வலம் வெகுவிமரிசையாக நடந்தது. ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 14ல் தொடங்கியது. நேற்று, 300க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை எடுத்து, ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு அபி ?ஷகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்கள், பூங்கரகம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, சக்தி மாரியம்மன் மீது, ஏராளமான பூக்கள் கொட்டி வழிபாடு செய்தனர். நாளை, தீ மிதி விழா நடக்கவுள்ளது.