உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளையம்மன் கோவிலில் குண்டம் இறங்கி வழிபாடு

வெள்ளையம்மன் கோவிலில் குண்டம் இறங்கி வழிபாடு

கிணத்துக்கடவு: செட்டியக்காபாளையம், வெள்ளையம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா நடந்தது.


கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் வெள்ளையம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. கடந்த, 4ம் தேதி, ஆதிமூல பெரியவிநாயகருக்கு அபிஷேக, அலங்கார பூஜை, கணபதி ஹோமம், கன்னிமார் கருப்பராய சுவாமிக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேக பூஜைகள், தீர்த்தக் கிணற்றிலிருந்து சக்தி கும்பம் அழைத்து வரும் நிகழ்வு மற்றும் குண்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, பக்தர்கள் குண்டம் இறங்கி சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !