உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.76 லட்சம் காணிக்கை

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.76 லட்சம் காணிக்கை

 வடவள்ளி: முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.


நிரந்தர‌ உண்டியலில், ரூ.72.37 லட்சம், கோசாலை உண்டியலில், ரூ.2.32 லட்சம் திருப்பணி உண்டியலில், ரூ.1.55 லட்சம் என ரூ.76.25 லட்சம் காணிக்கையாக இருந்தது. அதோடு, 50 கிராம், 500 மி.கி., தங்கம், 2.40 கிலோ வெள்ளி, 35.600 கிலோ பித்தளை இருந்தது. கோயில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர்கள் விமலா, சுவாமிநாதன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை பார்த்தனர். கோனியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது ஏற்பட்ட திருட்டின் எதிரொலியாக, காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள், முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில், தனி அடையாள அட்டை வழங்கப்பட்டது. போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !