தம்புரா தவம்!
ADDED :2796 days ago
மகாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரத்துக்கு அருகில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ‘விஸ்வபுண்யதாம்’ என்ற தலம். இங்கே ஓர் அழகிய கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. அதன் முன் 24 மணி நேரமும் ஒரு பக்தர், கையில் தம்புராவை மீட்டிக்கொண்டு, ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று நாமசங்கீர்த்தனம் செய்த வண்ணம் உலாவிக் கொண்டிருக்கிறார். குறித்த நேரம் முடிந்ததும் மற்றொரு நபர் வந்து அந்த தம்புராவை வாங்கிக்கொண்டு நாம சங்கீர்த்தனத்தைத் தொடர்கிறார். இப்படியே மாறி மாறி இடைவிடாமல் நாள் முழுவதும் நாமசங்கீர்த்தனம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதை ‘தம்புரா தவம்’ என்கிறார்கள்.