உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கம்மாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா

சொக்கம்மாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா

பேரையூர், பேரையூர் அருகே வையூர் நல்லமரம் சொக்கம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் மார்ச் 30 நடந்தது. இதையடுத்து விநாயகர், சொக்கம்மாளுக்கு 48 நாட்கள் நடந்த மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை சக்தி பூஜை, சிறப்பு அபிேஷகம் நடந்தன. தொடர்ந்து யாகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா குழுவை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், விஷ்வரூபகேசவன், சுப்பாரெட்டி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !