கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்
ADDED :2703 days ago
கோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. ஈரோடு மாவட்டம், கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பின், திருக்கம்பம் நடுதல், சந்தனகாப்பு, 108 திருவிளக்கு பூஜை, மாவிளக்கு, அக்னி கும்பம், அலகு குத்துதல், திருக்கம்பம் எடுத்தல் நடந்தது. முக்கிய நிகழ்வான, மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்து. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* வைகாசி முதல் வெள்ளிக்கிழமை என்பதால், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று குவிந்தனர். குண்டத்தில் எலுமிச்சம் பழத்தில், நெய் தீபமேற்றி வழிபட்டனர்.