மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்: வாகனங்கள் அலங்கார ஊர்வலம்
ADDED :2703 days ago
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, பூச்சொரிதல் ஊர்வலம், நேற்றிரவு நடந்தது. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 13ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. நேற்றிரவு, பூச்சொரிதல் ஊர்வலம் விமரிசையாக நடந்தது. அலங்கரிப்பட்ட தேரில், மேளதாளங்களுடன் சென்ற, பூச்சொரிதல் தேருடன், நகரின் பல பகுதிகளில் இருந்து, நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். கரூர் நகரில் பல பகுதிகளில் இருந்து புறப்படும், 49 பூச்சொரிதல் தேர் ஊர்வலம், இன்று அதிகாலை கோவில் சென்று சேரும். வரும், 27 முதல், மூன்று நாட்களுக்கு திருவிழா நடக்க உள்ளது.