செம்முனீஸ்வரர் கோவிலில் மறுபூஜை
ADDED :2813 days ago
அந்தியூர்: அந்தியூரை அடுத்த, பட்லூர் செம்முனீஸ்வரர் கோவிலில், சித்திரை விழா, கடந்த மாதம், 20ல் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, தேரோட்டம், குட்டிக்குடி விழா, மே, 6ல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் கோவிலில் மறுபூஜை, நேற்று நடந்தது. இதையொட்டி செம்முனீஸ்வரர், வாமுனீஸ்வரர் மற்றும் பச்சியம்மன் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டன. தனித்தனி பல்லக்குகளில், 3 கி.மீ., தூரம், ஊர்வலமாக சுமந்து சென்றனர். விழாவில் வெள்ளித்திருப்பூர், பட்லூர், பூனாச்சி, பூதப்பாடி, மாத்தூர், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.