திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகம் துவக்கம்
ADDED :2703 days ago
திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பத்து நாட்கள் வைகாசி விசாக விழா நடைபெறும். இன்று காலை 7:30 மணிக்கு மேல் ரிஷப லக்கனத்தில் கொடியேற்றம் நடந்து விழா துவங்குகிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் தினசரி இரவு 8:00 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவீதி உலா நடைபெறும். மே 22ல் காலையில் திருத்தளிநாதருக்கு மந்திரநீர் முழுக்காட்டும், மே 23 காலையில் அம்மன் தவத்திற்கு எழுந்தருளி திருக்கல்யாணமும்,மே 26 காலையில் நடராசர் திருவீதி உலாவும், மே 27ல் தேரோட்டமும், மே 28ல் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.