உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா

சுந்தரராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா

ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், இன்று, தேர் திருவிழா நடக்கிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த திங்கட்கிழமை, கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்று மாலை சேஷ வாகனத்திலும், மறுநாள் சிம்மம், சந்திர சூரிய பிரபை மற்றும் கருட வாகனம் என, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, உலா வருகிறார்.இன்று காலை, தேர் திருவிழா நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்படும் தேர், பஜார் வீதி, திருத்தணி சாலை, அஞ்சலக வீதி வழியாக, மாலை, 4:00 மணிக்கு, மீண்டும் நிலைக்கு வந்து சேர்கிறது.நாளை, சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !