செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
திருப்பூர்: பல்லடம், 63 வேலம்பாளையம் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலா கலமாக நடைபெற்றது.செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 18ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, திருமகள், நவகோள் வழிபாடு, திசைக்காவலர் வழிபாடுடன் துவங்கியது. மாலையில், தீர்த்தக்குடம், முளைப் பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. தொட ர்ந்து, மூலசக்தியை திருக்குடத்தில் சேர்த்து, முதல்கால வேள்வி பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம், இரண்டாம் கால வேள்வி பூஜை, சிவாச்சார்யா ஆன்மார்ந்த பூஜை நடந்தது. மதியம் கோபு ர கலசங்கள் பொருத்தப்பட்டன. மூன்றாம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, மூலவருக்கு எண்வகை மருந்து சாற்றி, கரு வறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு, மூல விக்ரஹத்துக்கு சக்தி அளித்தல், திரவிய வேள்வி, முழு நிறைவு வேள்வி, பேரொளி வழிபாடு, நான்காம் கால வேள்வி பூஜைகள் ஆகியவை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன.
காலை, 7:00 மணிக்கு தீர்த்தக்குடங்கள், யாக சாலையில் இருந்து புறப்பட்டன. காலை, 7:15 மணிக்கு, மூலவர் விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து, செல் லாண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம், பெருஞ் சாந்தி, திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீ சர்மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், சிதாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு, அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, ஈசன் பெருஞ்சலங்கை ஆட்டம், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு, 63 வேலம்பாளையம், வேல் மயில் கலைக் குழுவினரின் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது.