வைகாசி தேர்த்திருவிழா: சுகவனேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
ADDED :2809 days ago
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, கொடியேற்றும் விழா நடந்தது. அதில், சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி, கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றினர். வரும், 27 வரை, காலை, 9:00 மணிக்கு, பள்ளக்கில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பட்டு, ராஜகணபதி கோவில், சின்னக்கடை வீதி, வ.உ.சி., மார்க்கெட், கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக, மீண்டும் வந்தடைவார். இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு வாகனத்தில் அதே வழியாக திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 28 காலை, 7:00 மணிக்கு, தேர்த்திருவிழா, அழகிரிநாதர் கோவிலில், 29 காலை, 7:00 மணிக்கு, தேர்த்திருவிழா நடக்கவுள்ளது.