உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரம் :ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரம் :ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

திருப்பூர்: திருப்பூர், கொங்கணகிரி ஸ்ரீ கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூரில், பழமை யானதும், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கந்தப்பெருமான் கோவில் உள்ளது. திருப்பூர், மக்கள் நல அறக்கட்டளை சார்பில், இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரம், 12 அடி உயரத் தில், 590 அடி நீளத்தில் பிரம்மாண்டமான திருமதில் சுவர், ராஜ கோபு ரத்திலிருந்து, கோவிலுக்கு செல்லும் பகுதியில், 10 ஆயிரம் ச.அடி பரப் பளவில் கல் தளம், சுற்றுப்பிரகாரத்தில், 10 ஆயிரம் ச.அடி பரப்பளவில் கல் தளம் அமைத்தல், ஆகிய பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ராஜகோபுரம் பணி யில், 98 சுதைகள் அமைத்து, சுவாமிகளின் சிலைகளுக்கு பஞ்ச வர்ணம் பூசும் பணியும், பிரம்மாண்ட ராஜகோபுரம் கதவு, ராஜகோபுரம் படி ஏறும் பகுதிகளில், கல்லால் செதுக்கப்பட்ட யானை சிற்பங்கள் என, ராஜகோபுரம் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும், 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கிரிவலப்பாதை, பக்தர்கள் வசதிக்காக, எட்டு கழிப்பிடங்கள் என, பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.

வெளிப்பகுதியில், பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஸ்ரீ கந்த பெருமான் எழுந் தருளியுள்ள கருவறை, உற் சவர் சன்னதி கோபுரங்கள், கன்னி மூல செல்வ விநாயகர், வெங்கடேச பெருமாள், கருடாழ்வார், நவக்கிரகம், சித்திவிநாயகர் சுவாமிகளின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதி களில், புதுப்பித்தல், சுதைகள் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணி வேலைகள் வேகமாக நடந்து வரு கின்றன. மலை மேல் சுற்றுப் பிரகாரம், கருங்கல் பதித் தல் ஆகிய பணிகளும் தீவிரமாக நடந்து வரு கின்றன. மூன்று மாதத்தில், திருப்பணிகளை நிறைவு செய்து, கும்பாபிஷேகம் நடத்த, மக்கள் நல அறக்கட்டளை திட்டமிட் டுள்ளது. திருப்பூர், மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி கூறுகையில், வரும், ஆக., மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !