திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :3018 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.கோயில் விசாக கொறடு மண்டபத்தில் தங்கம், வெள்ளி குடங்கள், 16 சொம்புகளில் புனிதநீர் நிரப்பி யாகசாலை பூஜை நடந்தது. மாலை மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படியானது. மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு அபிஷேகம் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனை நடந்தது.