ஊர்த்திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்
ADDED :2713 days ago
ஓசூர்: சூளகிரி அடுத்த, பீளாளம் கிராமத்தில் நடந்த ஊர்த் திருவிழாவை முன்னிட்டு, பெண் பக்தர்கள், மாவிளக்கு ஏந்தி, ஊர்வலமாக சென்றனர். சூளகிரி அடுத்த, பீளாளம் கிராமத்தில், நேற்று ஊர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி, பீளாளம் கிராமத்தில் இருந்து, சூளகிரி பஜார் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு, 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், தென்னை குருத்துகள் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட மாவிளக்கை எடுத்து கொண்டு, ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மாரியம்மன் கோவிலில், மாவிளக்கை படைத்து, சிறப்பு பூஜை செய்தனர். பின், மாவிளக்கை எடுத்து, பெண் பக்தர்கள் ஊருக்கு சென்றனர்.