தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்
கோத்தகிரி: கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவிலில் நடந்துவந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 18ம் தேதி, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ேஹாமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. 15ம் தேதி, ரக்ஷா பந்தனம், அங்குரார்ப்பணம் மற்றும் கும்பாஸ்தனம், முதல் கால பூர்ணாகுதி பூஜையை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கால வேதாபாராயணம், முருகபெருமாள் மூலமந்திரம் ஆகியவை இடம் பெற்றது. திருவிழா நாளான நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல், மூன்றாம் கால வேள்வி வழிபாடுடன், மூலமந்திரம், நாடி சந்தனம், மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடந்தது. கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் முன்னிலையில், ஐய்யனுக்கு மகாகும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.