உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவிலில் 108 செவ்விளநீர் அபிஷேகம்

சக்தி விநாயகர் கோவிலில் 108 செவ்விளநீர் அபிஷேகம்

ஈரோடு: உலக நன்மைக்காக, கோவிலில், 108 செவ்விளநீர் அபிஷேகம் நடந்தது. மழைவளம் பெருக, உலக நன்மைக்காக ஆண்டு தோறும், ஈரோடு முனிசிபல் காலனி, சக்தி விநாயகர் கோவில் மூலவருக்கு, ஆண்டு தோறும், 108 செவ்விளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட இக்கோவிலில், ஒன்பதாவது ஆண்டு விழா, நேற்று நடந்தது. அப்போது செவ்விளநீர் அபிஷேகம், சிறப்பு பூஜை, பூஜையும், அதைத் தொடர்ந்து அபி?ஷகம், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !