உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன்

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அக்னிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் அக்னிச் சட்டி ஏந்தி வந்தனர். சிலர், தொட்டிலில் குழந்தையை எடுத்து வந்தனர். மேலும், அலகு குத்தி ஊர்வலம் வந்து, ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து கிடா வெட்டுதல் நடந்தது. நாளை மறுநாள், மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !