பசவேஸ்வரருக்கு ஜெயந்தி விழா
ADDED :2724 days ago
ஓசூர்: கெலமங்கலம் பகுதியில் உள்ள பசவேஸ்வர சுவாமி கோவிலில், ஜீபி, சின்னட்டி, கெலமங்கலம் பகுதி மக்களின் சார்பில், நேற்று, காலை தீபாராதனை மற்றும் பசவ ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு, பத்ர காளி, வீரபத்திர சுவாமிக்கு ருத்ராபி?ஷகம், காலை, 10:00 தீபாராதனை, பகல், 12:00, நீர்மோர் பானக சேவை, இரவு, 7:00 மணிக்கு வீர காசி நடனம் நடந்தது. இரவு, 11:00, அக்னி குண்ட பிரவேசம் மற்றும் பத்ர காளி சமேத வீரபத்திர சுவாமி பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.