திரவுபதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2809 days ago
ஆத்தூர்: திரவுபதி அம்மன் கோவிலில், 1,500 பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஆத்தூர், தாயுமானவர் கோவில் தெருவிலுள்ள, திரவுபதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 5ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, 8:30 மணிக்கு, 1,500 பக்தர்கள், பால்குடங்கள் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, 2,000 லிட்டர் பாலை, அம்மன் மீது ஊற்றி அபி?ஷகம் நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். இன்று, அம்மனுக்கு திருக்கல்யாணம், 25ல், தீமிதி திருவிழா, 26 மதியம், 3:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.