காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ.30 லட்சம் செலவில் திருப்பணி
ADDED :2728 days ago
மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில், 30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் துவங்கின.கோவை மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு, 2015ம் ஆண்டு பல திருப்பணிகள் செய்து, கும்பாபிேஷகம் நடந்தது. அப்போது விடுபட்ட பிரகாரமண்டபம், மடப்பள்ளிக்கு சுருக்கி போட்டு தட்டோடு பதித்தல், அரங்கநாயகி தாயார் சன்னதி முன் மண்டபத்தில் வர்ணம் பூசுதல், தரை தளம் சரி செய்தல், குடிநீர் தொட்டி அமைத்தல் உட்பட பல்வேறு திருப்பணிகள், 30 லட்சம் ரூபாய் செலவில் நடந்தன. இதையடுத்து, திருப்பணிகள் துவக்க விழா நடந்தது. முன்னதாக அரங்கநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் அர்ச்சகர் சுரேஷ் நாராயணன், வேத வியாச ஸ்ரீதர் பட்டர் ஆகியோர், சிறப்பு பூஜைகள் செய்தனர்.