மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :2719 days ago
கட லுார்: கட லுார் மாவட்டம், மங்கலம்பேட்டையில் அமைந்துள்ள, மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
.மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவில் நேற்று (23ம் தேதி) தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.