தேவகோட்டை நகர சிவன் கோயிலில் சேக்கிழார் விழா
ADDED :2802 days ago
தேவகோட்டை, தேவகோட்டை நகர சிவன் கோயிலில் சேக்கிழார் விழா சபா.அருணாசலம் தலைமையில் நடந்தது. பழனியப்பன் வரவேற்றார், அரு.சோமசுந்தரம், சித்ரா சுப்பிரமணியம் பேசினர். கோவிலுார் ஆதினம் மெய்யப்ப சாமிகள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெரியபுராண முற்றோதலில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நாராயணன் செட்டியார், கோவிலூர் மடாலய கல்வி ஆலோசகர் குமரப்பன், நகர சிவன்கோவில் டிரஸ்டிகள் பங்கேற்றனர்.