உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கருடசேவை உற்சவம்: 29ல் விடுமுறை

காஞ்சிபுரம் கருடசேவை உற்சவம்: 29ல் விடுமுறை

காஞ்சிபுரம்: கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு, வரும் 29ல், உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று துவங்குகிறது. வெகு விமரிசையாக நடைபெறும் இந்த உற்சவத்திற்கு, வெளி மாவட்டத்திலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். வரும், 29ல், கருடசேவை உற்சவம் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதை முன்னிட்டு, 29ல், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !