உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேற்குணம் கிராமத்தில் அம்மன் தேரோட்டம்

தேற்குணம் கிராமத்தில் அம்மன் தேரோட்டம்

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: தேற்குணம் கிராமத்தில் செங்கேணி அம்மன் கோவில் தேரோட்டத்தில், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.கிளியனுார் அருகே  உள்ள இரதசீலபுரம் எனும் தேற்குணம் கிராமத்தில் பழமைவாய்ந்த செங்கேணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சாமி வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று மாலை 5:00 மணிக்கு செங்கேணி அம்மன் தேரோட்டம் நடந்தது. தேற்குணம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !