காம்யோற்சவம்
ADDED :2737 days ago
செல்வத்தை விரும்புவோர் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை பக்தியோடு பூஜித்தால் மக்கட்பேற்றையும் சகல சவுபாக்கியத்தையும், பெறுவர் என்கின்றன ஆகமநூல்கள் பலவும். மலர்ப்பந்தல் மற்றும் பூங்கோவில் அமைத்தும், நறுமணப்பொருட்களை அர்ப்பணித்தும், துளசி இலை, பூ, குங்குமப்பூ, ஆகியவற்றால் அர்ச்சித்தும், வடை, பாயசம், பழவகை, தேங்காய், தாம்பூலம், ஆகியவற்றை நிவேதித்தும் லட்சுமியைப் பூஜிப்பவன் மன்னர்களால் வணங்கப்படுபவனாகி, மண்ணுலகில் மக்களுடன் சகல சவுபாக்கியத்தையும் பெறுவான். அர்ச்சனைக்குரிய பீஜ எழுத்தான ‘ஸ்ரீம்’ என்பதையோ, பெயர்களையோ இதயத்தில் வைத்துப் போற்றிடுவது முறை என்கிறார் அத்ரிபகவான்.