பஞ்சபேத வாத்தியங்கள்
ADDED :2736 days ago
உத்தர காரணாகமம் இசைக்கருவிகளைப் பஞ்சபூதங்களின் அம்சமாக வகைப்படுத்தி, பலவகை வாத்தியங்களின் பயன்களையும் கூறியுள்ளது. மேளம், நாதஸ்வரம் முதலிய மரத்தாலானவை மண் தொடர்பான பிருதிவீவாத்யம் என்றும்; நீரிலிருந்து பெறப்படும் சங்குவாத்யம் நீர் அம்சமான ஆப்ய வாத்யம் என்றும்; வெங்கல உலோகத்தாலமைந்த பெரிய - பிரம்மதாளம் முதலானவை அக்னி அம்சமான ஆக்னேயவாத்யம் என்றும்; மூங்கிலுள்ள புல்லாங்குழல் முதலானவை காற்று அம்சமாய் விளங்கிடும் வாதவாத்யம் என்றும்; வாயால் பாடப்படுகின்ற ராகங்களின் வகைகளான சங்கீதம் எனும் வாய்ப்பாட்டு ஆகாய அம்சமாய் விளங்கிடும் ககனவாத்யம் என்றும் அறிவிக்கிறது.