தேவாரத் திருத்தாண்டகப் பாசுரம்
ADDED :2736 days ago
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னியாகி!
கடலாகி மலையாகி அருவுமாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வனாகி!
எழுஞ்சுட ராகி எம்மடுகள் நின்றவாறே!
காவிரி நல் யமுனை கங்கை சரஸ்வதி!
பொற்றாமரைப் புட்கரணி தெண்ணீர்க்
கோவிலோடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே!
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழி அரங்கம் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்! எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!