உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

நங்கவள்ளி: நங்கவள்ளி அடுத்த, வனவாசி, ஸ்ரீமஹா சக்தி காளியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள், காவிரியிலிருந்து குடங்களில், புனிதநீரை எடுத்துவந்தனர். மேல்சாலை, எம்.என்.வி., மண்டபம் அருகிலிருந்து, பஞ்ச வாத்தியம் முழங்க, யானை, குதிரை, ஒட்டகம், பசு ஆகியவற்றுடன் ஊர்வலமாக, சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்குச்சென்றனர். இன்று காலை, 5:00 மணிக்கு மேல், 6:30 மணிக்குள், காளியம்மன், 6:00 மணிக்குமேல், 7:30 மணிக்குள், சவுடேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !