உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மோற்சவ விழா: புதுச்சேரி வரதராஜ பெருமாள் வீதி உலா

பிரம்மோற்சவ விழா: புதுச்சேரி வரதராஜ பெருமாள் வீதி உலா

புதுச்சேரி:  புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப்பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு  சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள்கோவிலின், 32ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.  இன்று மோகனாவதாரத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 26ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா 29ம் தேதி நடக்கிறது. 30ம் தேதி 108 கால திருமஞ்சனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !