உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கா தீர்த்த தடம்: சிறப்பு ரயில் இயக்கம்

கங்கா தீர்த்த தடம்: சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: கங்கையில் நீராட செல்லும் பக்தர்களுக்காக, கங்கா தீர்த்த தடம் என்ற பெயரில், இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு சுற்றுலா, ஏசி ரயிலை இயக்குகிறது. இச்சுற்றுலா ரயில், கேரள மாநிலம், கொச்சுவெலியில் இருந்து, வரும், ஜூன், 19ல் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல், வழியாக, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் சென்றடையும். கங்கையின் முதன்மை நீரோட்டம் துவங்கும் பகுதியான, தேவ்பிரயாக் செல்லலாம். ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத் - வாரணாசி, பீகாரில் கயா, மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் கங்காசாகர் ஆகிய புனித ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 47 ஆயிரத்து, 200 ரூபாய் கட்டணம். மேலும் தகவலுக்கு, தன் சென்னை அலுவலகத்தை, 98409 02919, 98409 02916 என்ற மொபைல் போன் எண்களில் பேசி, தெரிந்த கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !