எளியவர்களின் தெய்வம்
ADDED :2734 days ago
தமிழகத்தில் முருகபக்தர்கள் மிக அதிகம். முருகனுக்கும் முத்தமிழுக்கும் நெருக்கம் அதிகம். வைதாலும் அருள்புரிபவர் என்று அவரைக் குறிப்பிடுவர். தாயைப் போல பிள்ளை என்பது போல, தன் அன்னை பார்வதியைப் போல முருகனும் அழகு வடிவாகவும், அருள் (கருணை) வடிவாகவும் திகழ்கிறார். அவர் எல்லாருக்கும் அருள்பவர் என்ற பொருளில், தீன சரண்யன் என்று குறிப்பிடுவர். எளிய மக்களின் புகலிடமாக இருப்பவர் அவர். அதனால், மலை, காடு, நதி என்று எல்லா இடங்களிலும் முருகன் கோயிலை அமைத்து வழிபடுகின்றனர்.