பழநி வைகாசி விசாகம் நாளை மே 27ல் திருக்கல்யாணம் மே 28ல் தேரோட்டம்
ADDED :2734 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, நாளை (மே 27) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் (மே 28) வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கிறது.வசந்த உற்ஸவவிழா எனப்படும், வைகாசி விசாக விழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மே 22 முதல் 31 வரைபத்து நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை ஆறாம் நாள் இரவு 7:00 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மே 28ல் வைகாசி விசாகத்தன்று பெரியநாயகியம்மன் கோயில் ரதவீதியில் மாலை 4:30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.அன்று மலைக்கோயில் அதிகாலை 4:00 மணி நடைதிறக்க ப்படும். விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளுகிறார்.பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.