உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்

ராமநாதபுரத்தில் ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்

ராமநாதபுரம்:இடையர்வலசை ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இடையர்வலசை ஐயர் மடம் தேசிய நெடுஞ்சாலையில் ஷீரடி சாய்பாபா கோயில் கட்டப் பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் மே 23 ல் துவங்கியது. மே 24 ல் ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ் டை செய்யப்பட்டது. நேற்று (மே 25)ல் நான்காம் கால யாகபூஜை, கோ பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. தீபாராதனைக்குப்பின் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நவநீதகுருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினார். நிகழ்ச்சியில் பரமக்குடி சக்திக்குமரன் செந்திலாண்டவர் கோயில் நிர்வாக அறங்காவலர் சுப.லக்குமணன், கோயில் நிறுவனர் கே.வி.ரமணி, சாய்பாபா சன்மார்க்க அறக்கட்டளை அறங்காவலர் ஜி.அதிவீரபாண்டியன், செயலாளர் சிவஞானமூர்த்தி நிர்வாகிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !