சாத்தமங்கலத்தில் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் பால்குட விழா
ADDED :2734 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா மே 18 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (மே 24)ல் மாலை மூலவருக்கு பூச்சொரிதல் விழா நடை பெற்றது.
நேற்று (மே 25)ல் காலை 10:00 மணிக்கு சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து விரத மிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தீ மதித்து நேர்த்தி கடன் நிறை வேற்றினர்.
சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி நடை பெற்றன. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி கருப்பத்தேவர், தி.முக., தலைமை செயற்குறு உறுப் பினர் தன்சேகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.