உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்துறை சீதேவியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்

பெருந்துறை சீதேவியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்

பெருந்துறை: சீதேவியம்மன் கோவிலில், கொடியேற்று விழா, நேற்று 26 ல், நடந்தது.பெருந்துறை அடுத்த, காஞ்சிக்கோவிலில், பிரசித்தி பெற்ற, சீதேவியம்மன் கோவில் அமைந்துள்ளது. வைகாசி மாதத்தில், குண்டம் விழா மற்றும் தேர்திருவிழா நடக்கும். நடப்பாண்டு தேர்திருவிழா, கடந்த, 16ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்றிரவு 26 ல், கோவில் கொடிமரத்தில், கொடியேற்று விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 31ல், குண்டம் விழா, ஜூன், 1ல், தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !