உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் நாளை (மே 27)ல் தேரோட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் தெப்பம் தேரோட்டம்

திருப்புத்தூரில் நாளை (மே 27)ல் தேரோட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் தெப்பம் தேரோட்டம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நாளை (மே 27)ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

நாளை (மே 27)ல் மறுநாள் 12 ஆண்டுகளுக்குப் பின் தெப்பம் நடைபெறுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக விழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் இரவில் ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று (மே 25)ல் காலை நடராஜர் திருவீதி உலா நடந்தது.

இரவில் கைலாசம், சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.நாளை காலை 5:30 மணிக்கு மூன்று தேர்களில் திருத்தளிநாதர், சிவகாமி அம்மன், விநாயகர் எழுந்தருளு கின்றனர்.

மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்கும். மே28 ல் மாலை 6:30 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்களும்சீதளக்குளம் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

தொடர்ந்து நிலைத் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு தெப்பத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !