பரமக்குடி மஞ்சூரில் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2732 days ago
பரமக்குடி:பரமக்குடி அருகே மஞ்சூர் நென்மேனி உடையார் அய்யனார், சிவகாளி, மகமாயி அம்மன், கருப்பணசாமி, சோனைகருப்பன், கருங்காளி அம்மன், முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
மே 23 அதிகாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல்காலயாகபூஜை, பூர்ணாகுதி நடந்தது. மே 24 ல் காலை, மாலை 2, 3 ம் காலயாக பூஜைகளும்,நேற்று (மே 25)ல் காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதிநிறைவடைந்தது.காலை 9:30 மணிக்கு மேல் யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, கும்பம் ஆலயத்தை வலம் வந்து, கோபுரங்களை சென்ற டைந்தன. தொடர்ந்துவேத, மந்திரம் முழங்க மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.