உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி எமனேஸ்வரத்தில் வரதராஜப்பெருமாள் கோயிலில், வைகாசி வசந்தோத்ஸவம்

பரமக்குடி எமனேஸ்வரத்தில் வரதராஜப்பெருமாள் கோயிலில், வைகாசி வசந்தோத்ஸவம்

பரமக்குடி:பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில்,வைகாசி வசந்தோத்ஸவ விழா மே 28ல் துவங்குகிறது.அன்று காலை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மறுநாள் மே 29ல் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் அலங்காரமாகி வைகை ஆற்றில்அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து காலை 10:35 மணிக்குபெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி,முக்கிய வீதிகள் வழியாக இரவு வண்டியூரை அடைவார்.மே 30ல் மாலை 6:00 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்திலும்,தொடர்ந்து கருட,ஹனுமன் வாகனங்களில் அருள்பாலிப்பார்.ஜூன் 2 இரவு வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்துடன்புறப்பாடாகி, மறுநாள் காலை 10:00 மணிக்கு கோயிலை அடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !