திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசி தேரோட்டம் திருவிழா
ADDED :2726 days ago
மேலூர்: மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாயகர் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.
தேரில் திருமறைநாதர், வேதநாயகி அம்பாளுடன் எழுந்தருளினார் சிறப்பு தீபாராதனை நடந்தது. கிளாதிரி, திருவாதவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் தேர்வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.