ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில் தேரோட்டம்
ADDED :2724 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 8:-15 மணிக்கு தேரில் சுவாமி, மற்றொரு தேரில் சிவகாமி அம்மன் எழுந்தருளினர். ரமேஷ் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ரத வீதிகளை சுற்றி 9:45 மணிக்கு தேர் நிலையம் வந்தடைந்தது. விழாவில் சந்திர பிரபா எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, தக்கார் நாகராஜன் செயல் அலுவலர் நாராயணி, கோயில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.