நவபாஷாணத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
ADDED :2724 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் திருமண தடை, ஏவல், தர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் நவபாஷாணத்திற்கு வந்து நவகிரகங்களை சுற்றி தரிசனம் செய்தனர்.