உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்திமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

சக்திமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

வால்பாறை;வால்பாறை, சக்திமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை காமராஜ் நகர் சக்திமாரியம்மன் திருக்கோவிலின், 19ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, கணபதி ேஹாமமும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தது.நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு ஓய்வு பெற்ற தமிழாசிரியர் துண்டையன் திருக்கொடி ஏற்றினார். விழாவில், இன்று காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதன் பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் தலைவர் பொன்னன், தர்மகர்த்தா சின்னப்பராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !