உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் மாரியம்மன் தேர் திருவிழா நிறைவு

சூலக்கல் மாரியம்மன் தேர் திருவிழா நிறைவு

பொள்ளாச்சி:சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, அன்னதானம், மகா அபிேஷகத்துடன், நேற்று நிறைவடைந்தது.பொள்ளாச்சி அடுத்துள்ள, சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில், மூன்று நாள் தேரோட்ட திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.பூவோடு எடுத்து, பொங்கலிட்டு, மாவிளக்கு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். அம்மன் திருக்கல்யாண வைபவத்துக்கு பின், கடந்த, 24ம் தேதி தேரோட்டம், துவங்கியது. 26ம் தேதி தேர் நிலைக்கு வந்தது. அதன்பின், 32 கிராமங்களில் பக்தர்கள் மஞ்சள் நீராடினர்.விழாவின் நிறைவு நிகழ்வாக நேற்று, அன்னதானமும், அம்மனுக்கு மகா அபிேஷகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !